ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழகம் வருகிறார் அமித் ஷா


K.N.Vadivel| Last Updated: திங்கள், 11 ஜனவரி 2016 (06:48 IST)
தமிழகத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை காண, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வருகைதர உள்ளார்.
 
இது குறித்து, சென்னை விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  இந்த நல்ல செயலுக்கு காரணமாக இருந்த, மத்திய வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டேன்.
 
குறிப்பாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றே தீர வேண்டும் என்பது பாஜக தேசிய தலைவர் அமித் ஷா-வின் விருப்பம். அது மட்டும் அல்ல அவரது பெரும் முயற்சியே இந்த வெற்றிக்கு காரணம். எனவே,  அவருக்கு எனது சார்பிலும், தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
எனவே, தமிழகத்தில் தடைகளை தாண்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால், அதைக் காண பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வருகை தர வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றார். 


இதில் மேலும் படிக்கவும் :