1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified புதன், 9 நவம்பர் 2022 (22:48 IST)

கோப்பையை வென்ற விளையாட்டு வீரருக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக மாவட்ட தலைவர்

bjp
பிரமாண்ட கோப்பையை வென்ற விளையாட்டு வீரருக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக கரூர் மாவட்ட தலைவர் – பாஜக அலுவலகத்தில் கொண்டாட்டம்.
 
கரூர் வடக்கு மாநகர பாஜக தலைவர் வடிவேல், இவரது மகன் மணிஸ், இவர், கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகின்றார்.

இவர் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களாக கரூர் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் முதலிடம் பிடித்தார். இந்நிலையில், கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில், மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் அவர்களிடம், அவர் பெற்ற வெற்றிகோப்பைகளை காட்டி வாழ்த்துக்களையும் பெற்றார். இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட துணை தலைவர் செல்வம், பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன், கரூர் மாநகர தெற்கு தலைவர் ராயனூர் கேபிள் ரவி மற்றும் வடக்கு நகர தலைவர் வடிவேல், அரவக்குறிச்சி மண்டல் பொதுச்செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
 
Edited By Sinoj