பாஜகவுக்கு 22 தொகுதிகள்... ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஒப்புதல்!

Sugapriya Prakash| Last Modified சனி, 27 பிப்ரவரி 2021 (10:32 IST)
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல். 

 
தமிழகத்தில் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அதிமுக கூட்டணி பாஜக தொடர்கிறது என இரு கட்சிகளும் பரஸ்பரம் வெளிப்படையாக அறிவித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. 
 
இதனிடையே, சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை முதல்வர், துணை முதல்வரை தனித்தனியே சந்தித்து பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :