பாஜக பேரணி; பிரியாணிக்கு பாதுகாப்பு வேண்டும்: காவல் நிலையத்தில் மனு!

Biriyani BJP
Prasanth Karthick| Last Modified வியாழன், 27 பிப்ரவரி 2020 (13:03 IST)
திருப்பூரில் பேரணி நடைபெற உள்ள நிலையில் பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு வேண்டி மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் நாளை திருப்பூரில் பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி காவல் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் பாஜக பேரணி நடத்தும்போது தங்கள் கடை பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவையில் இந்து முண்ணனி பொறுப்பாளர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது பிரியாணி அண்டா திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து, திருப்பூரில் கடை உரிமையாளர்கள் இந்த மனுவை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :