வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Updated : செவ்வாய், 22 நவம்பர் 2016 (12:24 IST)

2000 ரூபாய் நோட்டை இன்னும் எத்தனை சோதனைகள்தான் செய்வது?- வீடியோ

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை அடுத்து புதிய 2000 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த புதிய 2000 ரூபாய் நோட்டு சாயம் போவதாக பலரும் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக பலரும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிட்டனர். ஆனாலும் சிலர் புதிய ரூபாய் தாள் சாயம் போகவில்லை என்றும் பதிவிட்டனர்.



இந்நிலையில் 2,000 ரூபாய் நிற விவகாரம் தொடர்பாக தற்போது புதிய வீடியோ ஓன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் 2,000 ரூபாய் நோட்டை தண்ணீரில் கொதிக்க வைத்தும், குளிர்பானங்களில் ஊற வைத்தும் என பல சோதனைகளை செய்து பார்க்கின்றனர்.

இந்த சோதனையின் முடிவில் புதிய 2000 ரூபாய் நோட்டு சாயம் போகவில்லை.  இப்பொழுதாவது நபுங்கள் மக்களே...

இந்த வீடியோ உங்கள் பார்வைக்கு