ஜோதிடத்தில் நம்பிக்கை... பெற்ற மகனைக் கொன்ற தந்தை...

Sinoj| Last Modified செவ்வாய், 2 மார்ச் 2021 (23:09 IST)

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோவில் வீதியைச் சேந்தவர் ராம்கி. இவரது மனைவி காய்த்ரி. இவர்களுக்கு
சாய்சரன் மற்றும் சர்வேஸ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.


ராம்கிக்கு ஜோதிடத்தில் ஆழ்ந்த ஈடுபாடுள்ளதாகத் தெரிகிறது. எனவே வாழ்க்கையில் முன்னேற வேண்டி என்னென்ன செய்யவேண்டுமென பல ஜோதிடர்களைச் சந்தித்துக் கேட்டுள்ளார்.

அப்போது யாரோ ஒருவர் ராம்கியிடன் அவரது மூத்த மகனான சாய்சரணை உடனே வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமெனக் கூறியுள்ளார். அதைக் கேட்டு வீட்டிற்கு வந்த அவர் சாய்சரணை விடுதில் படிக்கவைக்க திட்டமிட்டுள்ள கூறவே மனைவி காயத்திர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டிலுள்ள மண்ணெண்ணெய் எடுத்து சாய்சரண் மீது ஊற்றி அவர் மீது தீ பற்ற வைத்துள்ளார்.

இதைப்பார்த்துப் பதறியடித்த காயத்ரி அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதில் 90% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சாய்சரன் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து ராம்கியை இகைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :