வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: புதன், 26 நவம்பர் 2014 (18:27 IST)

பண்ணாரி கோவிலில் ஒரு மாதத்தில் ரூ. 31 லட்சம் உண்டியல் வசூல்

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இன்று உண்டியல் எண்ணப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் ரூ. 31 லட்சத்து 51 ஆயிரத்து 732 வசூல் ஆனது.

 
தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்தக் கோவில், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லையில் உள்ளது. ஆகவே இந்தக் கோவிலுக்குக் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும் அதிகமாக வருவது வழக்கம். தற்போது ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் அதிகமாக மாலை போட்டுச் செல்வதால், பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு ஐயப்பன் பக்தர்களும் அதிகம் வந்து செல்வது வழக்கம்.
 
கடந்த ஒரு மாதத்தில் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்கள், அம்மன் கோவிலில் வைத்துள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம் மற்றும் வெள்ளியைக் கணக்கிடும் பணி, இன்று காலை தொடங்கியது. கோயமுத்துõர் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் இளம்பரிதி தலைமையில் நடைபெற்ற இந்த உண்டியல் எண்ணும் பணியில், தனியார் கல்லுõரி மாணவ, மாணவிகள் மற்றும் கோயில் அலுவலர்கள் கலந்துகொண்டு உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
 
இந்தப் பணி, இன்று மாலை ஐந்து மணிக்கு நிறைவு பெற்றது. இறுதியில் கடந்த ஒரு மாதத்தில் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரொக்கம் 31 லட்சத்து 51 ஆயிரத்து 732 ரூபாய், தங்கம் 34 சவரன், வெள்ளி 576 கிராம் ஆகியவற்றைப் பக்தர்கள் செலுத்தி, தங்கள் நேர்த்திக் கடனை நிறைவு செய்துள்ளது தெரிய வந்தது.