நிவாரண நிதி பெறுவதில் புது சிக்கல்: பொதுமக்கள் அவதி


Ashok| Last Updated: வெள்ளி, 8 ஜனவரி 2016 (16:05 IST)
வெள்ள நிவாரண நிதி பெறுவதற்காக சென்னையிலுள்ள வங்கிகளில் இரண்டு நாள்களாக கூட்டம் அலைமோதிய நிலையில், தற்போது வங்கிகளின் மூன்று நாள் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

 
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகையாக ஐந்தாயிரம் ரூபாயை வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளது. இந்த தொகையை பெறுவதற்காக  ஒரே நேரத்தில் பல்வேறு வங்கிகளில் மக்கள் குவிந்தனர். இதனால் வங்கி ஊழியர்கள் திணறினர். மேலும், பல இடங்களில் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டது, சில இடங்களில் பேருந்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது
 
வெள்ள நிவாரண நிதி வரும் 11ம் தேதிக்குள் பொதுமக்களின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வங்கி ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தத்தால் தங்களுக்கு நிவாரண தொகை கிடைக்கப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும் இவர்களால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரண நிதி தாமதம் அடைந்துள்ளது என்றும் குற்றம்சாட்டினர்.
 
இதனால், நிவாரண நிதியை வரும் திங்கள் கிழமைதான் வங்கிகளுக்கு சென்று பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :