மெரினா கடற்கரைக்குச் செல்லத் தடை நீட்டிப்பு: மோசமான வானிலை காரணமாக நடவடிக்கை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதன் காரணமாக, மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருந்தாலும், அதன் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே காற்றுடன் மழை பெய்து வருகிறது.
பாதுகாப்பு கருதி, மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டிட்வா புயல் காரணமாக நேற்று காலை முதல் இந்த தடை அமலில் இருந்தது. காவல்துறையினர் கடற்கரையில் தடுப்புகளை அமைத்து, பொதுமக்கள் நுழைவதைத் தடுக்கும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Edited by Mahendran