நல்ல கட்சி, கெட்ட கட்சி: அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

Last Modified ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (18:19 IST)
முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி கடந்த சில வருடங்களுக்கு முன் திமுக விலிருந்து நீக்கப்பட்ட நிலையில், கருணாநிதியின் மறைவிற்குப் பின்னர் மீண்டும் திமுகவில் இணைய அவர் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தது


இந்த நிலையில் தற்போது அவர் அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பதாகவும் ரஜினிகாந்த் கட்சி அமைத்தால் அவரது கட்சியில் அவர் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் அழகிரி ஆதரவாளர்கள் மதுரையின் சில பகுதிகளில் ஒட்டிய போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ’அண்ணே அண்ணே! அழகிரி அண்ணே! நம்ம கட்சி நம்ம கட்சி மதுரையில் இப்ப ரொம்ப கெட்டுப் போச்சுண்ணே! என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது

இதில் திமுக நல்ல கட்சியாக இருந்தது என்றும் ஆனால் தற்போது அந்த கட்சி கெட்ட கட்சியாக இருப்பதாகவும் அர்த்தம் கொள்ளும் வகையில் உள்ள இந்த போஸ்டர் திமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :