1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 13 பிப்ரவரி 2016 (16:11 IST)

ஆட்டோவை அடகுவைத்து பயணியை காப்பாற்றிய ரவிசந்திரன்: உதவும் உள்ளம் ஊர், பெயர் பார்ப்பதில்லை

கே.ரவிசந்திரன் ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிபவர். சென்னை ராயபுரத்தை சேர்த்த ரவிச்சந்திரன் அவர் சேப்பாக்கம் ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.


 

 
சில தினங்களுக்கு முன்னர் அவரது ஆட்டோவில் பயணம் செய்த கொல்கத்தாவைச் சேர்ந்த சங்கரதாஸ் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
 
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை மருத்துவமனையில் வேர்த்தார்.
 
பின்னர் சங்கர்தாஸிடம் இருந்த செல்போனைப் பார்த்து, அவரது மகனுக்கு தொலைபேசி வாயிலாக விஷயத்தை கூறினார்.
 
இதைக் கேட்டு சங்கர்தாஸின் மகன் கொல்கத்தாவில் இருந்து விரைந்து வந்தார். இங்கு வந்து பார்த்தபோது, அவரது தந்தை அபாய நிலையை கடந்து உயிர் பிழைத்திருந்தார்.
 
ஆனால், அவருக்கு செயற்கை இதய துடிப்பு கருவியை (பேஸ் மேக்கர்) பொருத்தினால்தான் தொடர்ந்து அவரால் உயிர்வாழ முடியும் என்று கூறினார்.
 
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த ஏழை மகன் செய்வதறியாமல் தவித்தார். அப்போது அவரிடம் 15 ஆயிரம் ரூபாய்தான் இருந்தது.
 
இதைக் பேட்ட ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன் தனது ஒரே சொத்தாகிய ஆட்டோவை சேட்டு கடையில் அடகு வைத்து, தேவையான பணத்தை வாங்கி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது.
 
இந்நிலையில், சங்கரதாஸ் உடல்நலம் தேறி டிஸ்சார்ஸ் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் இன்று (13.02.2015) தனது சாந்த ஊரான கொல்கத்தாவிற்கு புறப்பட்டார்.
 
ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன் இந்த பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தனதுசொந்த செலவில் செய்துகொடுத்துள்ளார்.
 
உழைக்கும் எளிய மக்கள் எப்போதும், அன்பு நிறைந்தவர்கள். அவர்கள் ஜாதி, மதம், மாநிலங்கள், நாடு என்ற வேறுபாடுகளைப் பார்ப்பதில்லை.
 
தன்னைப் போலவே பிறறையும் நேசிப்பவர்கள் என்பதை இந்த அட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன் உணர்தியுள்ளார். இந்த சம்பவம் நம்மை மிகவும் நெகிழவைத்துள்ளது.