வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 17 மார்ச் 2016 (08:33 IST)

குத்திக் கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்: முட்புதரிலிருந்து உடல் மீட்பு

குத்திக் கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்

சென்னை ஆர்.கே.நகரில் ஆட்டோ ஓட்டுநர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் முட்புதரில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.


 

 
சென்னை கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ ஓட்டுநரான இவர் அதே பகுதியில் தண்ணீர் கேன் போடும் வேலையையும் பார்த்து வந்தார்.
 
திருமணமான இவருக்கு தேவி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். சுரேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
 
இதனால், கோபமடைந்த அவரது மனைவி தேவி கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
 
இந்தநிலையில், வீட்டில் இருந்து வெளியே சென்ற சுரேஷ், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இரவு நீண்டநேரம் ஆகியும் அவர் வரவில்லை.
 
இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் இது குறித்து காவல்துறையினரிடம் புகாரின் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் காவல்துறையினர் மாயமான சுரேசை தேடி வந்தனர்.
 
இந்நிலையில், இரவு 11 மணியளவில் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல்துறையினர் தண்டையார்பேட்டை ரயில் தண்டவாள பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது தண்டவாளத்திற்கு அருகே உள்ள முட்புதரில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதை கண்டு ஆர்.கே.நகர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
 
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், முட்புதரில் கிடந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
 
இந்த விசாரணையில், பிணமாக கிடந்தவர், காணாமல்போன ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் என்பது தெரிய வந்தது.
 
இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு காவ்லதுறையினர் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து அந்த உடலை பார்த்த பிணமாக கிடந்தது சுரேஷ்தான் என்பதை உறுதி செய்தனர்.
 
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேத பரிசேதாதனையில், சுரேஷின் வயிற்றில் கத்தியால் குத்தியதற்கான காயம் இருந்தது தெரியவந்தது.
 
இதனால், அவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டிப்பது தெரியவந்தது. அவரை கொலை செய்து உடலை முட்புதரில் வீசி சென்று இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 
 
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேசின் நண்பர்கள் பெரா என்கிற பெரோஸ்கான், பிரபு, பழனி ஆகிய 3 பேரை சந்தேகத்தின்பேரிடம் விசாரணை நடத்தினர்.
 
இந்த கெலை சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் கொலை செய்யப்பட்ட சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.