அலும்பு புடிச்ச அரியர் பாய்ஸ்; யூட்யூபில் லைவ்! – அதிர்ச்சியடைந்த நீதிபதிகள்!

high court
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 1 டிசம்பர் 2020 (12:00 IST)
தமிழக அரசு கல்லூரி அரியர் மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கியது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், அது யூட்யூபில் லைவாக வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்லூரி தேர்வுகள் ரத்தான நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க முடியாது என யூஜிசி கூறிவந்த நிலையில் இதுகுறித்து மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

முன்னதாக இது தொடர்பான வழக்கு வீடியோ கான்பரன்சில் நடந்த நிலையில் ஏராளமான மாணவர்கள் வீடியோ காலில் இணைந்ததால் வழக்கு விசாரணையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கின் மீதான விசாரணை நடந்து வரும் நிலையில் அதை யாரோஒ ஒருவர் யூட்யூபில் லைவாக ஒளிபரப்பு செய்தததால் பதற்றம் எழுந்துள்ளது. கடந்த முறை மாணவர்களை எச்சரித்த நிலையில் தற்போது மீண்டும் இவ்வாறு நடந்திருப்பது நீதிபதிகளின் விசாரணைக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :