செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 நவம்பர் 2024 (13:19 IST)

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு
தென் தமிழகம் மற்றும் கொங்கு பகுதியை மையமாக கொண்டு 75 தொகுதிகளுக்கு ஒரு மாநிலம் என தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என அர்ஜூன் சம்பத் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்றும் கோவையை தலைமை இடமாகக் கொண்டு கொங்கு மாநிலம் பிரிக்க வேண்டும் என்றும் குரல் எழுந்து வரும் நிலையில், அர்ஜுன் சம்பத் தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்றும் கொங்கு பகுதி, தென்தமிழகம் மற்றும் மீதமுள்ள பகுதி என மூன்றாக பிரிக்க வேண்டும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், ஐயப்பன் குறித்த சர்ச்சைக்குரிய பாடலை பாடிய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது பா ரஞ்சி அவர்தான் மதங்களுக்கு இடையே, ஜாதிகளுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறார் என்றும் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அர்ஜுன் சம்பத்தின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva