தமிழக சட்டப்பேரவைக்கு தற்காலிக சபாநாயகர் நியமனம்

Tamilnadu
Sinoj| Last Modified சனி, 8 மே 2021 (17:45 IST)

தமிழக சட்டப்பேரவையில் தற்காலிய சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார்..

திமுக கூட்டணி நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்றது. இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் 34 பேர் தமிழக அமைச்சரவையில் பதவி
ஏற்றுக்கொண்டனர்.

இன்று பதவியேற்றவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில், நாளை காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதல் ஆலோசனைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.

எனவே, தமிழக சட்டப்பேரவைக்கு
புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க விரைவில் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிக்கப்பட்ட நிலையில் தற்காலிய சபாநாயகராக கு.பிச்சாண்டி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை கூடும் மே 11 ஆம் தேதி எம்.எல்.ஏக்களுக்கு கு.பிச்சாண்டி பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :