1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2016 (17:55 IST)

அப்பல்லோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

அப்பல்லோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததுள்ளது. அதைத்தொடர்ந்து அங்கு வெடிகுண்டு அகற்றும் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பதற்றம் நிலவுகிறது.


 

 
75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி இரவு காலமானார். அவர் சிகிச்ச்சை பெற்று வந்த நாட்களில் அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தது.
 
அந்த அறிக்கையில் சந்தேகம் உள்ளது என்று அப்போதே வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது. அதோடு ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு காண வந்த அனைவரையும் பார்க்க அனுமதிவில்லை. 
 
அந்த 75 நாட்கள் மர்மமாகவே உள்ளது. இதனால் அப்பல்லோ மருத்துவமனை மீது அதிமுக தொண்டர்கள் கோபத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளேன் என்று மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து ஆயிரம்விளக்கு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வெடிக்குண்டு அகற்றும் துறையினர் விரைந்து வந்து ஒவ்வொரு மாடியிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பதற்றம் நிலவுகிறது.