வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 21 நவம்பர் 2015 (19:28 IST)

திப்பு சுல்தான் பிறந்தநாளை கொண்டாட தடை விதித்தது ஜனநாயக விரோத செயல் - இளங்கோவன்

திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட தடை விதித்து இருப்பது ஜனநாயக விரோத செயலாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

 
இது குறித்து சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடத்தில் பேசிய இளங்கோவன், ”மத நல்லிணக்கத்தை பாதுகாக்க திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட போலீசார் தடை விதித்து இருப்பது ஜனநாயக விரோத செயலாகும்.
 
தமிழகத்தில் கூட்டம் நடத்த தடை, பாட்டுப்பாட தடை, கருத்து சுதந்திரத்துக்கு தடை என தடைக்கு மேல் தடையை இந்த அரசு ஏற்படுத்தி வருகிறது.
 
பருப்பு கொள்முதல் செய்ய தனியாருக்கு மத்திய அரசு அனுமதித்ததால் தனியார் லாபம் அடைந்துள்ளனர். ஒரு கிலோ துவரம் பருப்பு விவசாயிகளிடம் ரூ.40–க்கு வாங்கி மார்க்கெட்டில் ரூ.220–க்கு விற்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பருப்பில் ரூ.180 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பருப்புகள் அதானியின் துறைமுகங்களில் பதுக்கி வைக்கப்பட்டு விலை உயர்ந்த பின்பு கொள்ளை லாபம் அடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.