1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Another Arrest Made in Conspiracy Case to Overthrow CM Vijay’s TVK Government

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. மேலும் ஒருவர் கைது.. கைது எண்ணிக்கை 9 ஆக உயர்வு...

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றி கழக அரசை கவிழ்க்கச் சதி செய்ததாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
விஜய் தலைமையிலான தவெக அரசை வீழ்த்த சதித் திட்டம் தீட்டியதாக ஏற்கனவே ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கில் புதிய திருப்பமாக மற்றுமொரு நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
தவெக ஆட்சியை கவிழ்க்கச் சதி செய்த விவகாரத்தில் ஏற்கனவே லயோலா கல்லூரி திருநாவுக்கரசு உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் திருவல்லிக்கேணி காவல்துறையினர், திருநாவுக்கரசின் கார் ஓட்டுநரான கிருஷ்ணன் என்பவரை தற்போது கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த சதித்திட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. 
 
இந்த விவகாரத்தின் பின்னணியில் இன்னும் சில முக்கிய புள்ளிகள் இருக்கக்கூடும் என்று காவல்துறையினர் பலமாக சந்தேகிக்கின்றனர். இதனால் வரும் நாட்களில் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவது, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக பொருட்கள்: மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..