தொடர்புடைய செய்திகள்
- விஜயா?.. அண்ணாமலையா?.. எந்த பக்கம் போகப்போகிறார் ராகவா லாரன்ஸ்?...
- விஜய் ஜெயிச்சதால மக்கள் மீது திடீர் பாசமா?!.. லதா ரஜினிகாந்தை விளாசிய புளூசட்ட மாறன்!..
- ஆதரவு கவுண்ட் கூடிக்கிட்டே போகுதே!.. உள்ளாட்சி தேர்தலை குறிவைக்கும் அண்ணாமலை!...
- அண்ணாமலையை தொடர்ந்து தனி இயக்கம் துவங்கிய லதா ரஜினிகாந்த்.. அரசியலுக்கு எண்ட்ரியா?..
- அண்ணாமலை விலகலால் பாதிப்பு இல்லை: தமிழக பாஜக.. பின்னடைவு தான்: கர்நாடக பாஜக
அரசு கேபிளில் இருந்து 3 சேனல்கள் நீக்கமா? தவெக அரசின் விளக்கத்திற்கு அண்ணாமலை பதில்..
அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து 3 செய்தி சேனல்கள் நீக்கம் என்பது தவறான தகவல் என தவெக அரசு விளக்கம் அளித்துள்ள நிலையில் இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
Edited by Siva
