அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு


K.N.Vadivel| Last Modified திங்கள், 14 டிசம்பர் 2015 (03:27 IST)
மாணவர்கள் போராட்டம் காரணமாக, அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
 
 
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதில் சென்னை கடும் பாதிப்புக்கு ஆளானது. இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, பின்பு நடைபெறும் என  அறிவிக்கப்பட்டது.
 
மழை வெள்ளம் காரணாக, தேர்வுக்கு முழுமையாக தயாராக முடிவில்லை என்று கூறி, என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனையடுத்து, டிசம்பர் 16 மற்றும் 18 ஆம் தேதி அன்று நடைபெற இருந்த தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
 
 
 


இதில் மேலும் படிக்கவும் :