வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : சனி, 12 செப்டம்பர் 2015 (19:26 IST)

உண்ணாவிரதப் போராட்டம் ரத்து செய்வதாக அன்னா ஹசாரே அறிவிப்பு

கருப்புப் பணப் பதுக்கல், மத்திய அரசின் நில ஆர்ஜித சட்டம் போன்றவற்றை எதிர்த்தும் வலிமையான லோக்பால் சட்டத்தை வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு இருந்த காந்தியவாதி அன்னா ஹசாரே திடீரேன போராட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி டெல்லியில் கருப்புப் பணப் பதுக்கல், மத்திய அரசின் நில அபகரிப்பு சட்டம் போன்றவற்றை எதிர்த்து வலிமையான லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பை வெளியிட்டார்.
 

ஆனால், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஒரே தகுதி - ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டதாலும், நில ஆர்ஜித சட்டத்தை கைவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாலும்


காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடத்த திட்டமிட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நான் ரத்து செய்வதாக அன்னா ஹசாரே தற்போது  அறிவித்துள்ளார்