செவ்வாய், 10 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

விஜய் பேச்சு தொண்டர்களை உற்சாகப்படுத்தவே: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

விஜய் பேச்சு தொண்டர்களை உற்சாகப்படுத்தவே: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்ததோடு, ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
 
விஜய்யின் பேச்சு குறித்து அமைச்சர் கூறுகையில், "விஜய் தனது கட்சியின் ஆண்டு விழாவில், அங்கிருந்த கட்சி தோழர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே அப்படி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் என்று நான் நினைக்கிறேன்," என்றார். 
மேலும், திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், மக்கள் திமுகவின் பக்கமே இருப்பதாக அவர் குறிப்பிட்டார். "எங்களுடைய முதல்வர் தமிழ்நாட்டின் தலைவராக பொறுப்பேற்றது முதல் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். 
 
இருப்பினும், மக்களின் மனங்களை வென்றதால் நாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய என்னென்ன செய்ய வேண்டுமோ, அதை நாங்கள் உறுதியாகச் செய்வோம்," என அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
Edited by Siva