ஆனந்த விகடன் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம்

K.N.Vadivel| Last Updated: புதன், 25 நவம்பர் 2015 (04:18 IST)
எந்தவித முன்னறிவிப்பு இன்றி ஆனந்த விகடன் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து, ஆனந்த விகடன் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆனந்த விகடனின் ஃபேஸ்புக் பக்கம் நேற்று முதல் முடக்கப்பட்டு இருக்கிறது. எந்த ஒரு அறிவிப்பும் ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் இருந்து விகடனுக்கு வரவில்லை. விகடன் தரப்பில் மேற்கொண்ட விசாரணைக்கும் இதுவரை பதில் இல்லை. ஃபேஸ்புக் பக்கம் முடக்கத்துக்கும் இந்த நிகழ்வுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
எத்தகைய இடையூறுகள் வந்தாலும், வாசகர்களுக்கு உண்மையைக் எடுத்துச் சொல்லும் விகடனின் பணி அனைத்து தளங்களிலும் தடையின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்த விகடனில், சமீபத்தில்,
ஒரு அரசியல் கட்டுரை வெளியானது. அதனால்தான், ஆனந்த விகடன் ஃபேஸ்பக் பக்கம் முடக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடதக்கது.இதில் மேலும் படிக்கவும் :