செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 ஜூன் 2025 (13:32 IST)

வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஆம்புலன்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட நோயாளி: நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்..!

வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஆம்புலன்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட நோயாளி: நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்..!
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, கிராஸிங் வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியபோது, ஆம்புலன்சில் பொருத்தப்பட்டிருந்த ஸ்ட்ரெச்சர் திடீரென பின்பக்கக் கதவில் மோதியது. இதில் கதவு திறந்து, ஸ்ட்ரெச்சருடன் நோயாளி கீழே விழுந்தார்.
 
இதைக் கண்ட பொதுமக்கள் பதறிப்போய், பின்னால் வந்த வாகனங்களை எல்லாம் நிறுத்திவிட்டு, நோயாளியை பத்திரமாக மீண்டும் ஆம்புலன்ஸ் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
உயிர்காக்கும் வாகனமாக செயல்படும் ஆம்புலன்ஸ்கள் சரியாக பராமரிக்கப்படாததால்தான் இதுபோன்ற சம்பவம் நிகழ்வதாகப் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது குறித்த சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் சரியான பராமரிப்புடன் ஆம்புலன்ஸ்களை வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Edited by Siva