திறக்கப்பட்டது அமராவதி அணை: கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Suresh| Last Modified செவ்வாய், 28 அக்டோபர் 2014 (10:43 IST)
உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி அணை அதன் முழு கொள்ளளவான 90 அடியை எட்டியதால் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து அமராவதி அணை அதன் முழு கொள்ளளவான 90 அடியை எட்டியது. தற்போது அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் கரையோரப் பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்த்தப்பட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :