வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2015 (20:37 IST)

திப்பு சுல்தான் பிறந்தநாளை கொண்டாட அனுமதிக்க வேண்டும் - நீதிமன்றத்தில் மனு

திப்பு சுல்தான் பிறந்தநாளை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

 
இது தொடர்பாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் இஸ்மாயில் தாக்கல் செய்துள்ள மனுவில், ”ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தீரமாக போரிட்டு, மறைந்தவர் திப்பு சுல்தான்.
 
பொதுவாக முஸ்லிம் மதத்தில் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. இந்து மற்றும் கிறிஸ்துவ மதங்களில்தான் பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கம்.
 
ஆனால், எங்களது கட்சி, மதசார்பற்ற கட்சி என்பதால், திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தோம். இதற்காக குடியாத்தம், ஆலிகர் தெருவில் திப்பு சுல்தான் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தோம்.
 
இந்த ஆலிகர் தெருவில்தான், அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுக்கூட்டம் நடத்துகிறது. இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதிக் கேட்டு குடியாத்தம் காவல் நிலையத்தினரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தேன்.
 
ஆனால், எங்களுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க மறுத்து குடியாத்தம் போலீசார் கடந்த 13ஆம் தேதி உத்தரவிட்டுள்ளனர்.
 
எனவே, எங்களுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிடவேண்டும். இதற்காக காவல் துறையினர் விதிக்கும் எந்த ஒரு நிபந்தனைகளையும் ஏற்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது.