வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (05:59 IST)

கரை ஒதுங்கியது எம்.எச்.370 விமானத்தின் பாகம் - ஆய்வில் உறுதி!

மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம், கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி, மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்றபோது நடுவானில் திடீரென மாயமானது. 


 
 
விமானத்தை தேடும் பணி இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. எனினும் விமான தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், மாயமான விமானத்தின் பெரிய அளவிலான உதிரி பாகம் கடந்த ஜூன் மாதம் கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சினியா நாட்டில் உள்ள பெம்பா தீவில் கண்டெடுக்கப்பட்டது.

பின் அது ஆய்விற்காக ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், தான்சானியாவில் கண்டெடுக்கப்பட்டது எம்.எச்.370 விமானத்தின் பாகம் தான் என்பதை ஆய்வின் முடிவில் மலேசியா உறுதி செய்துள்ளது. மேலும், அதில் பயணித்த 227 பயணிகளும், 12 சிப்பந்திகளும் மரணமடைந்துவிட்டதாக மலேசியா அரசு தெரிவித்துள்ளது.