காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு அதிகம்! – வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick| Last Modified திங்கள், 30 நவம்பர் 2020 (11:22 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த மண்டலமாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த வாரம் கரையை கடந்த நிலையில் தற்போது வங்க கடலின் தென் திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருமாறி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிர காற்றழுத்த மண்டலமாக வலுவடைய உள்ளதாக தெரிவித்துள்ளது.

அதை தொடர்ந்து டிசம்பர் 2 முதலாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதி கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :