திமுக விளம்பரத்திற்கு வாட்ஸ்அப்பில் பதிலடி கொடுத்த அதிமுக : வைரல் ஆடியோ


Murugan| Last Updated: புதன், 24 பிப்ரவரி 2016 (14:43 IST)
முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, திமுக கொடுத்த அதிர்ச்சி விளம்பரத்திற்கு வாட்ஸ் அப் ஆடியோ மூலமாக பதிலடி கொடுத்துள்ளது.

 

 
நேற்று தமிழகத்தில் இருந்து வெளிவரும் அனைத்து தமிழ் மற்றும் ஆங்கிலம் மற்றும் பிற மொழி நாளிழ்களில் திமுக சார்பில் ஒரு விளம்பரம் கொடுத்து இருந்தனர்.
 
அதில், ''அம்மாவை ஸ்டிக்கர்ல பாத்துருக்கிறீங்க, பேனர்ல பாத்துருக்கிறீங்க, ஏன் டீவியில கூட பார்த்துருக்கிறீங்க... ஆனா நேர்ல பார்த்துருக்கிறீங்களா?'' என்று அந்த விளம்பரம் கேட்கிறது. உச்சக்கட்டமாக 'என்னமா இப்படி பண்றீங்களேம்மா? என்று நக்கலாக தெரிவித்து இருந்தனர்.
 
இந்த விளம்பரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு உளவுத்துறை போலீசார் கொண்டு சென்றதாவும், இதைக் கேட்டு முதல்வர் கடும் கோபம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், திமுகவுக்கு உடனே பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. அதன் விளைவாக ஒரு ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக சார்பில்தான் அந்த ஆடியோ வெளியாகியிருக்கும் என்றாலும், யார் வெளியிட்டது என்ற விவரம் தெரியவில்லை.
 
வாட்ஸ்அப் பெஞ்ச் என்ற அந்த ஆடியோவில், இருவர் பேசிக் கொள்வது போலவும், அவர்கள் திமுகவை கிண்டலடித்து பேசுவது  போலவும் அந்த ஆடியோ அமைந்துள்ளது.
 
அதை நீங்களே கேளுங்கள்...
 


இதில் மேலும் படிக்கவும் :