தொடர்புடைய செய்திகள்
- ஆட்சிக்கு வந்துட்டோம்னு மிரட்டுறீங்களா?!.. செங்கோட்டையனிடம் கோபப்பட்ட பத்திரிக்கையாளர்கள்!..
- ஸ்டாலின்தான் எங்களுக்கு சி.எம்!... படுங்க.. பட்டு திருந்துங்க!.. கொளத்தூரில் அழுத சத்யராஜ்!...
- கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!.. தவெக அரசு அதிரடி!.. திமுக அதிர்ச்சி!...
- எம்.பி ஆகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!.. விஜய் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்!...
- கோட் பிரச்சன இல்ல!.. எல்லாத்தையும் கோட்டை விடுறதுதான் பிரச்சனை!.. விஜய் அட்டாக் பண்ணும் உதயநிதி!...
தவெகவுக்கு தாவும் அதிமுகவின் முக்கிய தளபதிகள்!.. பழனிச்சாமி ஷாக்!..
தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி மலர்ந்துள்ளது.
அதோடு காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட பலரும் எம்.எல்.ஏ-வாக மாறியதோடு அமைச்சராகவும் மாறியிருக்கிறார்கள். எனவே தமிழக அரசியலில் புதிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது
இதையடுத்து, அதிமுக மற்றும் திமுகவிலிருந்து பலரும் தவெக பக்கம் படையெடுத்து வருகிறார்கள்., ஏற்கனவே சிவி சண்முகம் எஸ்.பி வேலுமணி தலைமையில் 24 பேர் அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக சட்டசபையில் வாக்களித்தார்கள். மேலும் 4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில்தான், பல மாவட்டங்களிலில் இருந்தும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். இன்று எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் இன்று தவெக தலைமை அலுவலகம் சென்று தவெகவில் இணைந்திருக்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
