செங்கோட்டையனுக்கு பதவி கொடுத்தால் ஆதரவு இல்லை.. ஈபிஎஸ் கறார்.. 'நீங்கள் சொல்வதை கேட்க நாங்கள் பா.ஜ., அல்ல, தவெக பதிலடி..
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுகவில் பெரும் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
த.வெ.க அமைச்சரவையில் மூத்த தலைவர் செங்கோட்டையன் இடம்பெறக் கூடாது என எடப்பாடி பழனிசாமி நிபந்தனை விதித்ததாகவும், அதற்குத் த.வெ.க தலைமை மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செங்கோட்டையனுக்குச் சபாநாயகர் பதவி வழங்கத் த.வெ.க முன்வந்தபோது, அவர் வெறும் எம்.எல்.ஏ-வாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும், அப்போது தான் அதிமுக, தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் என்றும் பழனிசாமி பிடிவாதம் காட்டியுள்ளார்.
இதற்குத் த.வெ.க தரப்பில், நீங்கள் சொல்வதைக் கேட்க நாங்கள் பா.ஜ.க அல்ல” என ஆணித்தரமாகக் கூறிவிட்டனர். இதனால் பழனிசாமி ஆதரவு தர மாட்டார் என தெரிகிறது.
ஆனால் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி போன்ற சீனியர்கள் த.வெ.க-விற்கு ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இக்கருத்து வேறுபாட்டால், வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக இரண்டாக உடைந்து, ஒரு தரப்பு த.வெ.க-விற்கு ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே, இன்று நடைபெறவிருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைப் பழனிசாமி திடீரெனத் தள்ளிவைத்துள்ளார்.
Edited by Siva