பெயர் மாறுகிறதா அதிமுக தலைமை கழக அலுவலகம்? - சசிகலா அதிரடி


Murugan| Last Updated: வியாழன், 5 ஜனவரி 2017 (15:55 IST)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தின் பெயரை மாற்றுவது குறித்து, அதிமுக பொருளாலர் சசிகலா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

 
அதிமுக பொருளாலராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா, தமிழகத்தின் முதல்வர் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என அதிமுக கட்சிக்குள் கோரிக்கை வலுத்து வருகிறது. அதிமுக அமைச்சர்களின் ஆதரவு தனக்கு இருந்தாலும், நிர்வாகிகளின் மனநிலையை அறிய நினைத்த சசிகலா,  அனைத்து மாவட்ட  நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்த முடிவெடுத்தார். 
 
அதன்படி அதிமுகவின் கட்சி பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று அதிமுக தலைமை கழகத்தில் தொடங்கியது.  மாவட்ட ரீதியாக நடக்கும் இந்த கூட்டம் வருகிற 9ம் தேதி வரை நடக்கவுள்ளது. நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார்.
 
அப்போது, திமுகவிற்கு ‘அண்ணா அறிவாலயம்’ இருப்பது போல், அதிமுக தலைமை கழகத்திற்கும் பெயர் மாற்றம் செய்யப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டதாம். அநேகமாக, அதிமுக அம்மா தலைமை கழகம் என பெயர் விரைவில் சூட்டப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :