சசிகலாவின் மூன்று சபதம் என்ன? அதிமுக டிவிட்டரில் தகவல்!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 15 பிப்ரவரி 2017 (18:57 IST)
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சசிகலா, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று சபதம் எடுத்தார்.

 
 
பெங்களூர் சிறையில் இன்று சரணடையப்போகும் சசிகலா, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, ஜெயலலிதா சமாதி மேல் கையை மூன்று முறை அடித்து சபதம் செய்தார். 
 
தற்போது அந்த மூன்று சபதம் என்னவென்று அதிமுக டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ’சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன்’, என கூறி சசிகலா மூன்று முறை ஜெயலலிதாவின் சமாதி மீது கை வைத்து சபதம் ஏற்றுக் கொண்டதாக அதிமுகவின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :