மதுரையில் அதிமுக பிரமுகரை வெட்டி கொலை செய்த கும்பல்


Suresh| Last Updated: திங்கள், 21 மார்ச் 2016 (12:45 IST)
மதுரையில் அதிமுக கவுன்சிலரை 10 பேர் கொண்ட கும்பல், வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

 

 
மதுரை மாநகராட்சியின் 51 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்தவர் விஜயராகவன்.
 
இவர் முனிசாலை பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த 10 க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
 
எதிர்பாராத இந்த தாக்குதல் சம்வத்தால், படுகாயமடைந்து துடித்துக் கொண்டிருந்த விஜயராகவனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
ஆனால். அவர்  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இது அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலை அல்ல என்று தெரிவித்துள்ளர்.
 
வெட்டி கொலை செய்யப்பட்ட கவுன்சிலர் விஜயராகவன் அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :