1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (10:21 IST)

தேமுதிகவை விட மனமில்லாமல் மீண்டும் அழைப்பு விடுத்த அதிமுக!

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசிக்க தேமுதிகவுக்கு அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. 

 
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அதிமுக. ஆனால், தேமுதிகவிற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் தேமுதிகவினர் அதிருப்தியிலும் உள்ளனர்.  
 
அதோடு, தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கும் எண்ணத்தில் இருக்கிறதாம் அதிமுக. ஆனால் அதனை தேமுதிக ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது சமுகவலைதள பக்கத்தில், நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என்று பதிவிட்டுள்ளார். இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவுக்கு அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷிடம் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தொலைபேசியில் பேச்சு என தகவல்.