வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Updated : செவ்வாய், 5 ஏப்ரல் 2016 (04:22 IST)

வேல்முருகனுக்கு அல்வா கொடுத்த அதிமுக

வேல்முருகனுக்கு அல்வா கொடுத்த அதிமுக

அதிமுக கூட்டணியில் வேல்முருகனுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை.
 

 
கடந்த 13 ஆம் தேதி தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வரும் சட்ட மன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.
 
இந்த நிலையில், அமைச்சர்கள் வைத்திலிங்கம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், வேல்முருகனுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
அப்போது, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலையும் வேல்முருகன் வழங்கியுள்ளார். அந்த 11 தொகுதிகள் எதுஎது என்று விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார்.
 
இந்த நிலையில், அதிமுக அதன் கூட்டணி தலைவர்களுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. இதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 தொகுதிகூட ஒதுக்கவில்லை.  வேல்முருகன் அதிக தொகுதிகள் கேட்டதனால் அவர் கட்சி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.