சாலை விபத்தில் நடிகை டாப்சி: பிரச்சாரம் செய்ய களம் இறங்குகிறார்!


Caston| Last Modified செவ்வாய், 7 ஜூன் 2016 (17:08 IST)
என்னடா நடிகை டாப்சிக்கு சாலையில் விபத்தா என பதற வேண்டாம். சாலையில் ஏற்படும் விபத்தை தடுக்க நடிகை டாப்சி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

 
 
ஆடுகளம் திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில திரப்படங்களில் நடித்துள்ள நடிகை டாப்சி இந்தியிலும் 4 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருக்கு பைக் ஓட்டுவது ரொம்ப பிடிக்குமாம், ஆனால் தினமும் சாலையில் நடக்கும் விபத்துகளை பார்த்து தனக்கு பைக் ஓட்ட பயமாக இருப்பதாக கூறுகிறார் டாப்சி.
 
இது குறித்து பேசிய அவர், சாலைகளில் நிறைய விபத்துகளை பார்த்துள்ளதால் தன்னுடைய சிறு வயது ஆசையான பைக் ஓட்டுவதை விட்டுவிட்டதாகவும், சாலை விபத்து குறித்து மக்களிடம் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறியனார்.
 
மேலும், டெல்லியில் உள்ள தனது தோழிகளுடன் இணைந்து விபத்துகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்ய போவதாக டாப்சி அறிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :