வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 23 ஜூன் 2016 (12:35 IST)

நடிகர் சரத்குமாருக்கு திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமாருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 
 
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் முன்னாள் நடிகர் சங்க தலைவராக இருந்தார். கடந்த தேர்தலில் அவர் விஷால் அணியிடம் தோல்வியை தழுவினார்.
 
அதே போல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அவர் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்து திருச்செந்தூர் தொகுதிகளில் போட்டியிட்டு திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வியை தழுவினார்.
 
தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருந்த அவர் இன்று காலை திடீரென ஏற்பட்ட உடல் நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.