மதுபோதையில் காரை ஓட்டிய நடிகர் அருண்விஜய் : போலீசார் வாகனத்தில் மோதி விபத்து

மதுபோதையில் காரை ஓட்டிய நடிகர் அருண்விஜய்


Murugan| Last Modified சனி, 27 ஆகஸ்ட் 2016 (09:33 IST)
நடிகர் அருண் விஜய் மதுபோதையில் காரை ஒட்டி, போலீசாரின் வாகனத்தில் மோதியதால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

 
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக விளங்கும் விஜயகுமாரின் மகன் அருண்விஜய். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.
 
சென்னை நுங்கம்பக்கம் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஸ்டார் ஹோட்டலில் நேற்று நடிகை ராதிகா சரத்குமார் மகளின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டு தனது சொகுசு காரில் அவர் வீட்டிற்கு திரும்பினார்.
 
நுங்கம்பாக்கம் பகுதியில் வேகமாக சென்ற அவர் சாலையில் நின்றிருந்த போலீசாரின் வாகனத்தில் மோதியுள்ளார். காரில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததால் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
 
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அதில் அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 
 
இந்த சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :