வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 27 ஜூன் 2016 (15:53 IST)

சுவாதி படுகொலை: 2 மணி நேரம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சுமார் 2 மணி நேரம் சுவாதியின் உடல் பிளாட்பாரத்தில் கிடந்துள்ளது. இதற்கு என்ன காரணம்? என்று உயர் நீதிமன்றம் காவல்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது. 
 

 


 
 
 
 
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி மர்ம நபர் ஒருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் துறையினர் கொலையாளியை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுவாதி கொலை வழக்கில் இன்னும் குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சுமார் 2 மணி நேரம் சுவாதியின் உடல் பிளாட்பாரத்தில் கிடந்துள்ளது. இதற்கு என்ன காரணம்? அந்த பிணத்தை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லக்கூட ரெயில்வே போலீசாருக்கும், மாநகர போலீசார் உதவி செய்யவில்லை. 
 
காவல் துறையின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்றும், சுவாதி கொலை வழக்கின் விசாரணை என்ன நிலையில் உள்ளது என்று இன்று மதியம் 3 மணிக்குக்குள் காவல் துறையினர் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 
மேலும், உயர் நீதிமன்றம் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை மட்டும் தான் விசாரிக்கும் என்று நினைக்கக்கூடாது, உயர் நீதிமன்றத்துக்கும் சமுக பொறுப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.