1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2015 (16:15 IST)

அப்துல் கலாம் இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா - நடிகர் விவேக்

அப்துல் கலாமினால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களில் நடிகர் விவேக்கும் ஒருவர். அப்துல் கலாம் குறித்து தான் நடித்தப் படங்களில் அடிக்கடி மேற்கோள் காட்டியவர்.
 

 

முக்கியமாக, கலாமின் அறிவுரைப்படி நாடெங்கிலும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வருகிறார். பேச்சளவில் இல்லாமல் செயல்பாட்டால் கலாமை நேசிப்பவர்.
 
சமூக வலைத்தளத்தில் தனது அஞ்சலியை விவேக் பதிவு செய்துள்ளார்.
 
"இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு. என்னுடைய துக்கத்தை வார்த்தைகளால் விவரிப்பது எப்படி என்று தெரியவில்லை. அன்பின் வடிவம், அறிவின் உருவம், எளிமையின் தோற்றம். இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா. மாணவர்களுக்காவே உழைத்து, மாணவர்களுடன் இருக்கையிலேயே இன்னுயிர் நீர்த்த கலாம் அய்யாவின் பிறந்தநாளை, இந்திய மாணவர் தினம் என்று அறிவித்தால் என்ன?" என்று அவர் தனது அஞ்சலி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.