வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2015 (07:59 IST)

கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை: ஆவின் நிர்வாகம் எச்சரிக்கை

கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-


 

சென்னை மாநகரில் நாளொன்றுக்கு 11 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையினால் சென்னை மாநகரில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி, ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஆவின் நிர்வாகத்தால் போர்க்கால அடிப்படையில், உரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு, சென்னை மாநகரில் நேற்று முன்தினம் (5-12-2015) 10 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பாலும், நேற்று (6-12-2015) 10 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பாலும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சீரான முறையில் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ஆவின் நிர்வாகத்தால் அரைலிட்டர் (நீல நிற பாக்கெட்) மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு 17 ரூபாய்க்கும், சில்லறை விற்பனைக்கு 18 ரூபாய் 50 பைசாவிற்கும், (பச்சை நிற பாக்கெட்) அரைலிட்டர் மாதாந்திரபால் அட்டைதாரர்களுக்கு 19 ரூபாய் 50 பைசாவிற்கும், சில்லறை விற்பனைக்கு 20 ரூபாய் 50 பைசாவிற்கும், முழு கிரீம் பால் (ஆரஞ்சு நிற பாக்கெட்) அரைலிட்டர் மாதாந்திரபால் அட்டைதாரர்களுக்கு 21 ரூபாய் 50 பைசாவிற்கும், சில்லறை விற்பனைக்கு 22 ரூபாய் 50 பைசாவிற்கும், (மெகந்தா நிற பாக்கெட் ) அரைலிட்டர் மாதாந்திரபால் அட்டைதாரர்களுக்கு 16 ரூபாய் 50 பைசாவிற்கும், சில்லறை விற்பனைக்கு 17 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேற்காணும் விலையை காட்டிலும் அதிக விலைக்கு பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டாலோ, அல்லது தங்கள் பகுதிகளில் பால் வினியோகம் தடைபட்டாலோ, பொதுமக்கள் இது தொடர்பாக 9840387510, 9840907494, 9443944908 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கப்பட்டு, பால் வினியோகம் தொய்வின்றி தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்யப்படும்.

பொதுமக்கள் ஆவின் பால் மற்றும் பால்பவுடர் வினியோகம் குறித்து தங்களது குறைகளைத் தெரிவிக்க 9449975518, 9841762577, 9840335202, 9444854300, 9443093126, 9445001109, 9444732720, 9840363896, 9445001110, 9840120004, 9884001987, 9445001108, 9445127272, 9445195912 மற்றும் 9445001112. என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆவின் நிர்வாகம் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.