1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 30 செப்டம்பர் 2015 (23:18 IST)

கிராம சபை கூட்டம் மூலம் ஆதார் அட்டை

அதார் அட்டை பெறாதவர்கள், அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டம் மூலம் ஆதார் அட்டை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
இதுவரை ஆதார் அட்டை பெற்றவர்களின் பெயர் மற்றும் ஆதார் எண் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்த கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கப்பட்டுள்ளது.
 
ஆதார் அட்டை பெற பயோமெட்ரிக் பதிவு செய்து ஆதார் அட்டை இதுவரை பெறாதவர்களின் பெயர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பின், அவரது பெயருக்கு எதிரே பதிவாகியுள்ள 12 இலக்கம் கொண்ட  ஆதார் எண்ணை குறித்து, அரசின் பொது சேவை மையத்தின் மூலம் ரூ.30 செலுத்தி ஆதார் அட்டை பெறலாம்.
 
மேலும், இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள் அல்லது பயோமெட்ரிக் பதிவு செய்தும் ஆதார் எண் கிடைக்கப் பெறாதவர்கள், அவர்களது பெயர், தந்தை பெயர், முகவரி மற்றும் 27 இலக்கங்கள் கொண்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் எண் போன்ற தகவல்கள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த பட்டியலில் உள்ளவர்கள் தங்களின் பெயர்களுக்கு எதிரே பதிவாகியுள்ள 27 இலக்கங்கள் கொண்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் எண்ணை குறித்துக் கொண்டு ஆதார் அட்டைக்கான புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் எடுக்கும் மையத்துக்கு சென்று ஆதார் அட்டை பெற புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
 
இந்த பட்டியல் வரும் அக்டோபர் 2ஆம் தேதி அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் வைக்கப்படும். எனவே, இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.