காதலிப்பது, உல்லாசமாக இருப்பது, ஆபாச படங்களை வெளியிடுவது: சேட்டையை தொடர்ந்த மன்மதன் கைது


Abimukatheesh| Last Updated: புதன், 28 செப்டம்பர் 2016 (12:59 IST)
சென்னையில் இளம்பெண்களை காதலித்து, அவர்களுடன் உல்லாசத்தை அனுபவித்து, அந்த ஆபாச படங்களை முகநூலில் வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

 


 
 
சென்னை சிந்தாதிரிப்பேட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், எனது மகளை ஒருதலைக் காதல் என்ற பெயரில் தொந்தரவு செய்துவந்த நபர் ஒருவர், எனது மகளின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து ஆபாசமாக மாற்றி முகநூலில் வெளியிட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
 
மேலும் அந்த மனுவில், இதுபோன்று அந்த வாலிபர் பல இளம்பெண்களை காதலித்து, அவர்களுடன் நெருக்கமாக பழகி அந்த புகைப்படங்களை முகநூலில் வெளியிடுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், குறிப்பிடப்பட்டு இருந்தது.
 
புகாரில் குறிப்பிடப்பட்ட வாலிபர் சாமுவேல், இவர் மயிலாப்பூரை சேர்ந்தவர். இவர் பல பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். உல்லாசத்தில் ஈடுபடும் காட்சிகளை மறைமுகமாக தனது செல்போனில் படம் எடுத்து, இணையதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார். 
 
காவல்துறையினர் சாமுவேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சாமுவேல் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும், அந்த வீடியோ காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டதும் தெரியவந்தது.
 
இதையடுத்து காவல்துறையினர் சாமுவேல் மீது பெண்களை மானபங்க படுத்துதல், ஆபாச படங்கள் எடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :