முதியவர் மீது விழுந்த வேரோடு சாய்ந்த மரம்: சென்னையில் பரபரப்பு

முதியவர் மீது விழுந்த வேரோடு சாய்ந்த மரம்
siva| Last Updated: வெள்ளி, 27 நவம்பர் 2020 (07:43 IST)
முதியவர் மீது விழுந்த வேரோடு சாய்ந்த மரம்
சென்னை திருவல்லிக்கேணி சாலையில் முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர் மீது வேரோடு சாய்ந்த மரம் ஒன்று விழுந்ததால் சம்பவ இடத்திலேயே அந்த முதியவர் பலியானதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நிவர் புயல் காரணமாக பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னையில் ஏராளமான மரங்கள் சாய்ந்து உள்ளன. இந்த நிலையில் நேற்று சென்னையில் திருவல்லிக்கேணி சாலையில் முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரத்தில் இருந்த மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்

இது குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மரத்தை அப்புறப்படுத்தி முதியவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர் இதுகுறித்த சிசிடிவி காட்சி ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் மூன்று பேர் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :