வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 29 அக்டோபர் 2020 (16:41 IST)

சென்னையில் ரூ.5000 கோடி செலவில் ஈரடக்கு மேம்பாலம்

சென்னையில் ரூ.5000 கோடி செலவில் ஈரடக்கு மேம்பாலம்
சென்னையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஈரடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது 
 
சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே ரூபாய் 5000 கோடி செலவில் ஆறு வழிச்சாலை உடன் ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது. சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் விரைவுச் சாலை அமைக்கும் திட்டத்திற்கு கடந்த 2010ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது
 
2010ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் சுற்றுச்சூழல் விதிகளை காரணம் காட்டி தமிழக அரசால் 2012 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பறக்கும் சாலை பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது 
 
இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய போது அன்றைய மதிப்பீடு ரூபாய் ஆயிரத்து 815 கோடிதான். முதலில் நான்கு வழி சாலை வழியாக அமைக்க திட்டமிடப்பட்டது. அதன் பின்னர் 4 வழிச்சாலைக்கு பதிலாக 6 வழிச் சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு ரூபாய் 3500 கோடி ஆக உயர்த்தப்பட்டது
 
ரூபாய் 3500 கோடியில் இருந்து தற்போது இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூபாய் 5000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பில் ரூபாய் 400 முதல் 500 கோடியும், மத்திய அரசு சார்பில் ரூபாய் ஆயிரம் கோடியும் இந்த திட்டத்திற்கு கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முடிந்தால் சென்னை மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது