இதுவரை இல்லாத அதிகபட்ச கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பரபரப்பு

தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா
Last Updated: வெள்ளி, 29 மே 2020 (18:27 IST)
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இன்று தமிழகத்தில் 874 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 20246ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியான தகவல் ஆகும்
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 874 பேர்களில் சென்னையில் 618 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13362ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று முதல்முதலாக சென்னையில் 600ஐ தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 9 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 765 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 11313 என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் இன்று 11,334 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்பதும், தமிழகத்தில் இதுவரை மொத்தம் 4,66,550 பேர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :