8 தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப ‌நிறுவன‌ங்களு‌க்கு 160 ஏ‌க்க‌ர் ‌நில‌ம்: கருணா‌நி‌தி வழ‌ங்‌கினா‌ர்!

Webdunia| Last Modified வியாழன், 1 மே 2008 (16:45 IST)
த‌மிழக‌த்‌தி‌லதொழில் நிறுவனங்களை அமைக்க முன்வந்துள்ள 8 தகவல் தொழில்நுட்நிறுவனங்களுக்கு மொ‌த்த‌ம் 160 ஏ‌க்க‌ர் ‌நில‌ங்களை‌த் த‌மிழக அரசு இ‌ன்று வழ‌ங்‌கியது.

இதுகு‌றி‌த்து‌த் த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளதாவது:

மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய நகரங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரிலும், எல்காட் நிறுவனம் உருவாக்கியுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களில் தொழில் நிறுவனங்களை அமைக்க முன்வந்துள்ள 8 தகவல் தொழில்நுட்பத் தொழில் நிறுவனங்களுக்கு உரிய நிலஒதுக்கீட்டு ஆணைகளை முதலமைச்சர் கருணாநிதி இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
அதன்படி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு மதுரை இலந்தைகுளம் தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் 5 ஏக்கர் நிலமும், மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் 60 ஏக்கர் நிலமும், சதர் லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்திற்கு மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் 5 ஏக்கர் நிலமும், திருச்சி நவல்பட்டு தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் 10 ஏக்கர் நிலமும், திருநெல்வேலி கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் 10 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹனிவேல் இண்டர்நேஷனல் இந்தியா நிறுவனத்திற்கு மதுரை இலந்தைகுளம் தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் 5 ஏக்கர் நிலமும், டெசால்வ் சர்வீசஸ் நிறுவனத்திற்கு மதுரை இலந்தைகுளம் தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் 2.5 ஏக்கர் நிலமும், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு மதுரை, வடபழஞ்சி தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் 50 ஏக்கர் நிலமும் கொடுக்கப்படுகிறது.
இது தவிர சிபி நிறுவனம், சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ், காக்னிசண்ட் டெக்னாலஜி சொ‌ல்யூசன்ஸ் இந்தியா, ஸ்கோப் இன்டர்நேஷனல் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கும் காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் மொத்தம் 61.97 ஏக்கர் நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவற்றுக்குரிய நில ஒதுக்கீட்டு ஆணைகள் இன்று வழங்கப்பட்டன.


இதில் மேலும் படிக்கவும் :