மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை வெளியீடு

Tamilnadu
Sinoj| Last Modified வியாழன், 29 அக்டோபர் 2020 (20:01 IST)

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் வகையில் இன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சமீபகாலத்தில் தமிழகத்தில் பெரும் பேசு பொருளாக இருந்தது
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தான்.

இந்நிலையில் இந்தக் கோரிக்கை அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து இந்த மசோதா மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகும் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை.

இந்நிலையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் வகையில் இன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது .இதில் மேலும் படிக்கவும் :