செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: புதன், 8 அக்டோபர் 2025 (11:53 IST)

6 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை! தஷ்வந்த் மீதான மரண தண்டனை ரத்து.. விடுதலை?

6 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை! தஷ்வந்த் மீதான மரண தண்டனை ரத்து.. விடுதலை?

சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தஷ்வந்தின் தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 2017ம் ஆண்டு சென்னை போரூர் பகுதியை சேர்ந்த தஷ்வந்த் என்ற இளைஞர் அப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் தனது தாயையும் அடித்துக்  கொலை செய்துவிட்டு தப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு மும்பையில் கைதானார்.

 

இவர் மீதான வழக்கு விசாரணையில் தாய் கொலை வழக்கில், அவரது தந்தை பிறழ் சாட்சியாக மாறியதால், அந்த வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் சிறுமியை கொன்ற வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

 

இதை எதிர்த்து தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்ததுடன், தஷ்வந்தை விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளது. 

 

Edit by Prasanth.K